ૐ
• வித்தியேசுவர தத்துவம்
♋அனந்தர் என்னும் வித்தியேசுவரர் ஸர்வேசுவரரானதால் மற்றைய வித்தியேசுவரர்களுக்கும் சுத்தவித்தியா தத்துவத்தில் அடங்கியவர்களுக்கும் (இவர்) ஈசுவரர்; மாயையைக் கலக்குபவர்; மாயாதத்துவத்தில் உள்ள புவனங்களைப் படைப்பவர். ஆனால் இவர் எல்லாவற்றிற்கும் தலைவரான பரமேசுவரரினின்றும் வேறானவர்; அதிகார மலம் பக்குவமடைந்ததால் அந்த பரமேசுவரரால் அருளப்பட்டவர்.
♋இந்த சிருஷ்டிக் கிரமத்தில் ஆணவமலம் கருமமலமென்னும் இரு பாசங்களால் கட்டுண்டவர்கள் பிரளயாகலரென்றழைக்கப்படுவர்.
♋இவர்களுள் மலபரிபாகம் அடைந்தவர்கள் மீது பரமேசுவரரின் அருட்கண் பார்வை வீழ்ச்சியினால் அருளப்பட்ட நூற்றிப் பதினெட்டு உருத்திரர்கள் அடங்குவர். இவர்களுள் ஒருவரான ஸ்ரீகண்டருத்திரர் மத்திமப் பிரளயத்தின் இறுதியில் பிரகிருதி தத்துவத்தின் மேலமைந்த புவனங்களையெல்லாம் தோற்றுவிப்பார்.
ஆணவம்,கருமம்,மாயை ஆகிய மும்மலங்களுடன் கூடிய சகலர்களுள் ஞானம்,யோகம்,தவம்,தியானம் முதலியவற்றை அநுஷ்டிப்பதால் அடையப்படும் பிரஹ்மா,விஷ்ணு ஆகியோரின் பதவிகளையும் நிர்வகிப்பவர்; மத்திமப் பிரளயத்தில் இவர் ராகதத்துவத்தில் அடங்குவார். பின்பு சிருஷ்டிக் காலத்தில் அசுத்தாத்துவசிருஷ்டியைச் செய்து அதன் பின்பு[மேற்கூறிய] பிரஹ்மா,விஷ்ணு ஆகியோர்களின் சிருஷ்டிக்கும் காரணமாக விளங்குகிறார். அவர்களுக்குக் கீழுள்ள புவனேசுவரர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், ஈசுவரர்கள் ஆகியோரின் பிரஹ்மாண்டங்க்ளையும் சிருஷ்டி செய்கிறார்.
♋அந்தப் பிரஹ்மாண்டத்தில் சகலர்கள் வாழும் பதினான்கு உலகங்கள் அடங்கும்.
சுபம்
நமஸ்காரம்! ஶிவஶிவ! ஸித்தாந்த-ஶாஸ்த்ரத்தில் மிகுந்த ஈடுபாடு உடைய என்னை உங்களது இணையப்பக்கம் மகிழவைக்கிறது. ராகதத்த்வத்தில் ஶ்ரீகண்ட ருத்ரர் அடங்குவார் என்பதற்கான ஆகம அல்லது ஸித்தாந்த ஆசார்ய
ReplyDeleteப்ரமாணத்தை பகிர்ந்து கொள்ளவும். ������������