Wednesday, July 1, 2015

திருக்கூவப்புராணம் மூலமும் உரையும் (PDF) தரவிறக்க



உமையம்மையை ஒருபாகத்தில் கொண்ட சிவபெருமான் மஹிமை கூறும் சம்ஸ்கிருத ஸ்காந்தமஹா புராணத்தில்:சனற்குமார சம்ஹிதையில் “காளிகா காண்டம்” என்பதில் அடங்கிய திருக்கூவம் என்னும் சிவக்ஷேத்திரத்தின் சிறப்பை கூறுவது இந்த கூவப்புராணமாகும், இஃது புராணத்தை தமிழ் மொழியில் அருளிச்செய்தவர் துறைமங்கலம் சிவபிரகாசர் சுவாமிகள் ஆவார் இவரது காலம் 17ம் நூற்றாண்டு ஆகும். இஃது புராணத்தில் கூவப்பதியின் சிறப்பு மாத்திரம் கூறப்படாமல் வேதாகமங்கள் கூறியும் நம்மால் அறிய முடியா பற்பல முக்கிய விடயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இப்புராணத்தை சிவப்பிரகாச சுவாமிகள் செய்யுள் வடிவில் ஆக்கி மொத்தம் 703 செய்யுள்களில் எளிமையான முறையில் தந்துள்ளார்,
திருக்கூவப்புராணம் அமையப்பெற்ற முறை
ஆசிரியர்: துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

1.        பாயிரம்.
(1- 16)
2.        நைமிசாரணியச்சருக்கம்.
(17-86)
3.        திருத்தலச்சருக்கம்.
(87- 164 )
4.        திரிபுரதகனச்சருக்கம்.
(165-302)
5.        சந்தானகிரி சந்தானச்சருக்கம்
(303 -324)
6.        அடிமுடி தேடிய சருக்கம்
(327-368)
7.        செந்நெல்வைத்தசருக்கம்
(369- 410)
8.        தாருகன்வதைச்சருக்கம்
(411 - 703)

இஃது வேதாகமசங்கிரக இணையப் பக்கத்தில் கூவப்புராணத்தின் 703 செய்யுள்களும் அவற்றின் தெளிவான பொருளுரைகளும் தவறாமல் எழுதலாம் என்னும் எண்ணத்திலே இருந்தேன், ஆனால் வேலைப்பளு காரணம் அவற்றை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பில் எனக்கு சற்று தயக்கம், அதுமாத்திரமன்றி இணையப்பக்கத்தில் அவ்வளவு செய்யுளையும் உரையையும் எழுதுவதும், படிப்பதும் என்றால் காலம், பொறுமை இவையாவும் அதிகம் இருக்கவேண்டும், எனவே அந்த நூலை(PDF) நீங்களே தரவிறக்கிக் எம்பெருமான் மஹிமைகளையும், வேதாகம கருத்துக்களையும் எளிதே அறிந்து கொள்ளும் வண்ணமாக தந்துள்ளேன். இணைப்பை அழுத்தி தரவிறக்கி கொள்ளுங்கள் : இணைப்பு :- திருக்கூவப்புராணம் மூலமும்,உரையும்.

சுபமஸ்து

No comments:

Post a Comment