Thursday, May 14, 2015

வேத மந்த்ரங்கள்






|| ரிக்வேதம்1:89 - ஆ நோ பத்ரா: ஸூக்தம் ||

ओं आ नो  पत्रा: क्रतवो यन्तु विस्वतो तप्तासो अपरीतास उत्पित:|
तेवा नो यता सतमित् व्रुते असन्नप्रायुवो रक्षितारो तिवेतिवे ||:||

ஓம் ஆ நோ  பத்ரா: க்ரதவோ யந்து விஸ்வதோ தப்தாஸோ அபரீதாஸ உத்பித:|
தேவா நோ யதா ஸதமித் வ்ருதே அஸந்நப்ராயுவோ ரக்ஷிதாரோ திவேதிவே ||1.1||

தீமை கலவாத, தடையற்ற, தடைகளை உடைக்கவல்ல, மங்களமான எண்ணங்கள் எல்லாத்திசைகளில் இருந்தும் நம்மிடம் வந்து சேரட்டும். பக்தர்களை கைவிடாத தேவர்கள் எப்போதும் நமக்கு இன்பத்தை வளர்ப்பவர்களாக, அவர்கள் நம்மை காப்பவர்களாக இருக்கட்டும்.





|| யஜுர் வேதம் 4:5 - கணபதி மந்த்ரம்||
(ரிக்வேதம் 2:23:1ம் துதியாக உண்டு)

ओं गणानां त्वा गणपतिं हवामहे
कविं कवीनामुपमश्रवस्तमम् ।
ज्येष्ठराजं ब्रह्मणाम् ब्रह्मणस्पत
आ नः शृण्वन्नूतिभिःसीदसादनम् ॥
महागणाधिपतये नमः ॥ 

ஓம் கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீநாமுபமஸ்ரவஸ்தமம் .
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆ நஃ ஸ்ர்ண்வந்நூதிபிஃஸீதஸாதநம் .
மஹாகணாதிபதயே நமஃ . 

தேவர் கூட்டத்திற்கு தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே. உம்மை போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர். வேதங்களுக்கு நாயகர், எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்களை காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக.





||ரிக்வேதம் 3:62:10 – காயத்ரி மந்த்ரம்||

ओम् पूर्पुवः स्वः |
तत्सवितुर्वरेण्यम्
पर्को तेवस्य तीमहि |
तियो यो नः प्रचोतयात् ||

ஓம் பூர்புவஃ ஸ்வஃ |
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோ நஃ ப்ரசோதயாத் ||

 யார் நம்முடைய புத்திகளை நன்றாக நடத்துவாரோ அந்த சூரியனிலுள்ள பர்க்கனாகிய தேவனுடைய(மகேஸ்வரன்) மகிமையை தியானிப்போமாக.





||சுக்கில யஜுர்வேதம் -  3:60||

ओं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ।।

ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்ம் புஷ்டிவர்தநம்|
உர்வாருகமிவ பந்தநாந் ம்ர்த்யோர்முக்ஷீய மாம்ர்தாத்||

முக்கண்ணராகிய சிவபிரானை போற்றி வழிபடுகின்றோம். நறுமணம் கமழ்வதும் புஷ்டியைத் தருவதுமாகிய வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல மரணத்தில் இருந்து விடுபடுவோமாக. சிவபிரானை துதிக்கும் இந்த நிலையில் இருந்து விலகாமல் இருப்போமாக. 





||கிருஷ்ண யஜூர்வேதம் - 4:5:3:1||

ओम् नम: शम्पवे च मयोपवे च
नम: शङ्कराय च मयस्कराय च
नम: शिवाय  च शिवतराय च ॥

ஓம் நம: சம்பவே ச மயோபவே ச
நம: சங்கராய ச மயஸ்கராய ச
நம: சிவாய  ச சிவதராய ச

உலக இன்பமாகவும் ,மோட்ஷா இன்பமாகவும் இருப்பவரும் ,உலக இன்பத்தையும், மோக்ஷ இன்பத்தையும் தருபவரும்,மங்கல வடிவினரும் ,தம்மை அடைந்தவர்களைச் சிவமயமாக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.




சுபமஸ்து

No comments:

Post a Comment