Wednesday, May 13, 2015

பிரம்மச்சரியம் பற்றி சாந்தோக்ய உபநிஷத்திலிருந்து


பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிப்பதில் மூன்று விதங்கள் இருக்கின்றன. கனிஷ்டம், உத்தமம், அதமம், “கனிஷ்டம்” யாதெனில் எப்புருஷனுடைய மனதும்,தேகமும் இறைவனை அடையும் பிரம்மவித்தையில், சற்சங்கங்களில் ஈடுபட்டு நற்காரியங்களை செய்து, அவன் இருபத்திநான்கு வருஷகாலம் வரையில் இந்திரியங்களை ஜயித்து, வேதாதி சத்திய சாஸ்த்திரங்களை பிரம்மச்ரியத்தோடிருந்து படித்து சுசீலத்தை அனுஷ்டிக்க வேண்டும். விவாகமான பிறகும் லௌகீக விஷய விவகாரங்களில் மூழ்கக்கூடாது. அப்பொழுது அவனுடைய தேகத்தில் பிராணன் பலத்தை அடைந்து எல்லா சுபகுணங்களுக்கும் இருப்பிடமாகிறது.



வித்தியாப்பியாசத்தைக் கிரகிப்பதிலே வாழ்நாட்களின் முதற்பாகத்தைக் கழிக்கவேண்டும். உபாத்தியார்கள் சிஷ்யர்களுக்கு அதைப்பற்றியே எப்பொழுதும் போதிக்கவேண்டும். “நான் பிரம்மச்சரியம் முதலான விரதத்தை சரிவரக் காப்பாற்றினால் என்னுடைய சரீரமும், ஆத்மாவும், ஆரோக்கியத்தையும், பலத்தையுமடைந்து என்னுடைய பிராணனும் சிறந்தகுண முதலியவைகளால் நிறைகின்றது” என்று ஒவ்வொரு பிரம்மச்சாரியும் நிச்சயம் செய்து கொள்ளவேண்டும்.
நீங்கள் இவ்விதம் இன்பங்களையும் சந்தோஷங்களையும் விருத்தி செய்து கொள்ளுங்கள். “பிரம்மச்சரியத்துக்குக் கெடுதலை செய்யாமல் இருபத்திநான்கு வருஷத்திற்குப் பிறகு கிரஹஸ்தாச்சிரமம் செய்வேனேயானால் ! என்னுடைய தேகம் பிணிகளில் இருந்து நீங்கி, என்னுடைய ஆயுளும் நீடிக்கும்” என்பதை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்.



எம் மனிதன் நாற்பத்திநான்கு வருஷகாலம் வரையில் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து, வித்தியாப்பியாசம் செய்கிறானோ...அவனுக்கு சுபமானவைகள் விருத்தியாகிறது, அவன் கெட்டவைகளை அடக்கி ஒழித்து சிரேஷ்டமானவைகளை விருத்தி செய்கிறவனாகிறான். 


என்னுடைய வாழ்நாளில் முற் பகுதியைப் பிரமச்சரியத்தில் கழிப்பேனாக இருந்தால் எனது பிராணன் ஆனந்தத்தையும்,வலிமையையும் அடைகிறது. ஆகவே மத்திம பிரமச்சரியத்தை  நான் சித்தம் செய்வேன் என்று பிரம்மச்சாரியானவன் தனது குருவினிடத்தில் சொல்லவேண்டும்.



நாற்பத்தெட்டு வருஷகாலம் பிரம்மச்சரியத்தைக் காப்பாற்றிக்கொள்வதே மூன்றாவதான உத்தம பிரம்மச்சரியம். நாற்பத்தெட்டு வருஷபரியந்தம் உண்மையாய் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிப்பவன் தன்னுடைய பிராணனை வசீகரம் செய்து எல்லா வித்தைகளையும் கிரகிக்கிறான்.



ஆசான், மாதா, பிதா தங்களுடைய சந்தானங்களை வித்தையைக் கிரகிப்பதற்காகவும், நல்ல பழக்கவழக்கங்களை அனுசரித்து நடப்பதற்காகவும் வழிநடத்தி, அங்கனம் செய்வதனால் உண்டாகும் பயன்களை அவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும்.
சந்தானங்களும் இடைபிரியாமல் தங்களுடைய பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். அப்படிச்செய்வதனால் அவர்கள் வித்வான்களாகவும், பூர்ணவயது(நூறுக்கு மேல்) ஜீவிப்பவர்களாக ஆகிறார்கள். ஏனென்றால் இங்ஙனம் பிரம்மச்சரியத்தை அனுஷ்ட்டித்து குறைசெய்யாமல் இருப்பவர்கள் எல்லாவிதமான வியாதிகளிலிருந்தும் நீங்கி, பரம்பொருளாகிய மகேஸ்வரன் அருளால் தர்மார்த்த காமோக்ஷத்தை அடைகிறார்கள்.  

சுபமஸ்து

No comments:

Post a Comment