Wednesday, July 1, 2015

விஷேட தீக்ஷை பெறவுள்ள சீடனின் பாபச்செயல்களை காட்டும் அக்னி !


சோமசம்புபத்ததி:விஷேடதீக்ஷாவிதி:8-10.

சமயதீக்ஷைபெற்று சமய அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வாழும் சீடனுக்கு வழங்கப்படும் அடுத்த தீக்ஷை விஷேட தீக்ஷையாகும்.இஃது தீக்ஷையை பெறவிருக்கும் சீடனின் குணங்களை ஹோமகுண்டத்தில் எழும் அக்கினி மூலம் ஊஹித்து அறிந்த பின்னரே ஆச்சாரியரானவர் தீக்ஷை வழங்க வேண்டும் என்பது சோமசம்பு சிவாச்சாரியாரின் பத்ததியில் விளித்துள்ள விடயமாகும்.


  • அக்னியானது அமேத்யத்தின்(மலத்தின்) வாசனையுடையதாயிருப்பின் சீடன் பிறருடைய பூமியை அபகரித்தவனாகவும்,பிராமணனை கொன்றவனாகவும்,ஆச்சாரியர்.பிறர் பத்தினியை புணர்ந்தவனாகவும், கள் குடித்தவனாகவும்,பசுவை கொன்றவனாகவும்,செய்நன்றி மறந்தவனாகவும் கொள்ளவேண்டும்.


  • அக்னியானது கருமைநிறமுடையதாயும்,பிண நாற்றம் உடையதாயிருப்பின் கர்ப்பிணியை சங்கரித்தவனாக கொள்ளவேண்டும்.

  • கர்ப்பத்தை சங்கரித்திருப்பின் அக்னியானது காந்தியற்றதாக இருக்கும்.


  • பெண்ணை கொன்றிருப்பின் அக்னியானது சுற்றுகிறதாயிருக்கும்.


  • பிறர் சொர்ணத்தை அபகரித்தவனாக சீடன் இருப்பின் அக்னி நடுங்குகிறதாயிருக்கும்.


  • குழந்தைகளை கொன்றிருப்பின் அக்னி வெடிக்கும்.


சுபமஸ்து



No comments:

Post a Comment