Monday, July 6, 2015

சைவசமய பொது விவரிப்பு


தமிழுக்கு பெருமை சேர்த்தது சைவசமயம் அந்த சைவசமயம் தமிழுக்குள் மாத்திரம் அடங்குவதன்று, சைவசமயிக்கு இருமொழி உண்டு அம்மொழிகள் தமிழும், சமஸ்கிருதம் இவ்விரண்டும் சிவபெருமானால் அருளப்பட்டது இதனை ஆரியமும் தமிழும் உடனே சொலிக்;காரிகையார்க்குக் கருணை செய்தானே என்று திருமந்திர ஆகமச்சிறப்பில் திருமூல நாயனார் கூறியுள்ளார், ஏனைய சைவ சாஸ்த்திரங்களும் இதனை செப்பும், தமிழும் சமஸ்கிருதமும் சைவசமயத்திற்கு  இரு கண்கள்! சைவசமயிக்கும் அப்படியே .


சைவசமயம் என்பது ஒரு இனத்திற்கு, ஒரு மொழிக்கு உரித்தாகிய உடமையன்று. அது இந்த உலகின் ஜீவராசிகளுக்கு அனைத்துக்கும் உடமை.

மொழியென்பது அறிவினை பெருக்கும், வெளி சம்பாஷனையை மேம்படுத்தும். ஆனால் அது புலப்படுத்தும் அறிவு, சம்பாஷனையை  தெளிவே யாவரும் பயன்படுத்தினால் யாவருக்கும் உண்டு! அந்த அறிவும்,சம்பாஷனையும் ஒரு இனத்திற்கும் மொழிக்கும் உரியது என்றும்அவ்வினம்  அவ்மொழியை நாம் மாத்திரமே பயன்படுத்தலாம் என்றும்  கொண்டிருந்தால் இன்று ஒருவரும் முன்னேறியிருக்க மாட்டார்கள்.

முகநூலிலும், ஏனைய சமுக தளங்களிலும் பண்டைய சிவலாய கட்டுமானம், சிற்பக்கலை,வரலாறுகளை கூறி இடையே தமிழனின்,தமிழின் பெருமைஎன்று கூறி அதனை ஒடுக்குவது முறைமையன்று. பண்டைய காலத்தில் ஆலயம், சிற்பம், இலக்கியம், கவிகள், அரசாட்சி என்று எல்லாவற்றையும் திறம்பட நடாத்தியவர்கள் அனைவரும் சைவசமயிகள் என்பதை கூறுவது அவர்களுக்கு இழுக்கோ ?

தற்காலத்தில் சைவசமயத்தையும், சிவனையும் ஒரு இனத்திற்கும், ஒரு மொழிக்கும் வரையறை செய்து பரப்பும் கூட்டம் பல முளைக்கிறது. அப்படி செயல்பாடும் கூட்டம்  ஒன்றும் சைவசமயத்தின் பிரமான வேர்களில்லை.

இந்த பூமியில் யோனிப்பிறப்பெடுத்த மானுடர்களை வணங்கும் சிறுதெய்வ வழிபாடுகள், அவற்றிற்கு இடும் பலிகள் போன்றவை சைவசமயத்திற்குள் அடங்குவதன்று. அதற்கும் சைவசமயத்திற்கு தொடர்பு இல்லை. அப்பர் தமது தேவாரத்தில் 'சென்று நாம் சிறுதெய்வம் சேரோம் அல்லோம்' என்று முழங்கியிருப்பதை காண்க. சிலர் இதனையறியாமல் சிறுதெய்வ வழிபாட்டை கரம் மேற் கொண்டு வழிபடுகின்றனர், இது அவர்களின் அறியாமையே காரணம்.

இன்று நாம் சிவபக்தன் இராவணன் ஆட்சிசெய்த மண்ணில் பிறந்து நாம் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பலவுள. ஆனால் அதனை நான் இவ்விடத்தில் விரிக்கவில்லை. அதில் அடங்கும் முதன்மை காரணத்தை விரிக்கிறேன் கீழே இலங்கையில் உள்ள பௌத்தர்கள் தங்கள் சமயத்தை முதன்மை படுத்துகின்றனர் அதிலும் இலங்கை சட்டம் அனைத்தும் பௌத்தசாசனத்தின் கீழே வரையறை செய்யப்பட்டது, இஸ்லாமியர்கள் தன் சமயத்தை  முதன்மை படுத்துகின்றனர். இஸ்லாமியர்களிடம் உள்ள இஸ்லாமிய அறிவு, பற்றினை கண்டு நானே வியந்திருக்கிறேன். ஆனால் இவர்களனைவரும் மொழியையா முதன்மை படுத்துகிறார்கள்? இல்லை. தன்சமயத்தையே முதன்மை படுத்துகிறார்கள்.

• “நான் அரசாள்வேனாகில், எனக்கு விபூதியே அபிஷேகத்திரவியமும், உருத்திராட்சமே ஆபரணமும், சடாமுடியே கிரீடமும் ஆகுக" என்று கூறி மதுராபுரியை அரசாண்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய மூர்த்திநாயனாரின் வரலாற்றையும் இஃது இணைப்பில் படிக்கவும்:-  மூர்த்தி நாயனார் புராணம்

யாழை இராசதானியாக கொண்டு ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்து சங்கிலிய மன்னன்(ஏழாம் செகராசசேகரன்) கொள்கைகள் எல்லாவற்றையும் மறந்து நாம் இக்காலத்தில் வாழ்கிறோம்... வரலாறுகளை இனியாவது புரட்டுவோம்.. இஃது காலத்தின் தேவை.

முடிபு

திருச்சிற்றம்பலம்
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே
என்னும் திருஞான சம்பந்தப் பெருமான் வாக்கினை உணர்ந்து தேவையில்லா நவீன கொள்கைக்குள் சமயத்தை திணிக்க முற்படாமல், நம் சமயத்தின் சிறப்பினையும், ஆதிசமயமாம் சைவசமயத்தின் இறைவனாகவும், பசுக்களாகிய ஆன்மாக்கள் நமக்கு பதியாகவும் இருக்கும் எம்பெருமானின் மஹிமைகளை உணர்வோம், போற்றுவோம்,வழிபடுவோம்..

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

திருச்சிற்றம்பலம்


சுபமஸ்து

No comments:

Post a Comment